Wednesday, July 30, 2008



















நான் பூப்படைந்தேன்....


ஒன்பதாம் ஆண்டு....
சைவ சமய பரீட்சை குனிந்து கரிசனையோடு
எழுதுகிறேன்.....

என் கண்ணும்
விடைத்தாளும்
விளையாடிகொண்டிருக்கும் வேளை
ஏதோ ஒன்று
அந்நியமாய்...
என் கண்ணில் இடர்ப்பட...
என் மனதிலோ..
வெட்கம்
பூரிப்பு......
ஓர்
இனம் புரியாத மாற்றம்...

இப்புவியை வென்றுவிட்ட நினைப்பு..
அது...
என் மூக்கின் கீழோரம்
ஆடவனின்
வீரச்சின்னம்
எட்டிப்பார்க்க தொடங்கியிருந்தது....
பரீட்சை எழுதவில்லை...
ரசித்திருந்தேன்..
அன்று தான்
பிறந்திருந்த என் மீசையை.....

வருவாயா வருவாயா என
பார்த்து.. களைத்திருந்து...
காத்திருந்து..
என் மூத்தோர்... மீசையை....
நான் பார்த்து அவாப்பட்டு....
இறுதியில் வெற்றி பெற்ற ஆணவம்....

வீதியில் ஓர் அழகான
பெண் பார்த்தால்..
இத்தையல் என் மீது
மையல் கொண்டாளோ???
என்றெண்ணி தற்பெருமை
கொண்டு...
என் படுக்கை தலையணிகள்......

திக்கம் ரோடு
எனக்கு தேரோடும் வீதியாக....
திக்கம் வடிசாலை - அது
புண்ணிய ஸ்தலமாக...
திக்கம் மீன்சந்தை
எனக்கு W.T.C ஆக
திக்கம் என்னும் பேரை கேட்டால்
திடுக்கிட்டு நான் மலர......

திக்கத்துக்கன்னியவள்
என்னை
திக்கற்றவன் ஆக்கி விட்டாள்.....

நண்பர் என்று
சொல்லி
ஒரு கூட்டம்...
அது
நான் சொல்லி அழும்
கதை கேட்டு கைகொட்டும்....

திலி கிருபா வினோ கலி நாட்டமை
என்னுடனாக
ஆறு பெரும் சனியன்கள்...
உருப்படியா
ஒண்ணும் செய்யவில்லை.... - ஆனால்
ஊருக்குள்
நாமேதான் மைனர் குஞ்சுகள்......

தெய்வேந்திரம் எமது
வில்லனாக......
உதயராஜ் வந்து விரல் காட்ட
கண்டவன் எல்லாம்
புத்தி கூற....
சீர் கெட்டு போனது
எம் நிலைமை....

இனி இருந்தால்...
எம்மானம் பறந்தோடும்
அதன்
முன்னே
நாம் மெல்ல பறந்திடுவோம்...

பறந்திட்டோம் பறந்திங்கே
வந்துவிட்டோம்....
போராடத்தொடங்கிவிட்டோம்
எம்
வாழ்கைக்காய்...

அம்மா
இத்தனைக்கும்
காரணம்...
என்மீசைதானா.....?


அந்தநாள் நினைவலைகள்.


என்னடா இவன் ''குண்டன்''...
எந்த கடை அரிசி நீ என்று
போவான், வருவோன்
எல்லாம் பல்லிளித்து நகைத்திட...
மனத்திலோர் ஏக்கத்துடன்....
நானும் அழகாகேனோ.....??

என் மனதிலும்
''அலை'' அடிக்க....
புத்தகம் முன்னால்
மணிரத்னம் திரைக்கதைகள்..........

என் மனதில் அலை அடித்தால்....
அவள் மனதில் அடித்திடுமோ....???
அடித்திடும்...
என்றெண்ணி என் வாழ்வை சிதைத்திருந்தேன்......

காற்றடித்து... புயலடித்து......இடி இடித்து........
சுனாமி வந்து நகரழித்து....இடையில்.....
செய்யாத கூத்தெல்லாம் செய்தழிந்து.....
சுற்றார், என் நண்பர்
நானாடிய மண்பிரிந்து வந்த பின்னும்

அவள் மனதில்
அந்த ''அலை'' அடிக்கவில்லை......அடித்தது..
அவள் மனதில் அலை ஒன்று....
அதிலாடியதோ ''வேறோடம்''........














காதல்.............



காதலென்னும் அவ்வுணர்வு
கண்ணெதிரே சிறகடித்தால்.....
ஆபிரிக்க கறுப்பி கூட.....
அழகான தமிழ் பறைவாள்....

உன்னரம்பு சோர்ந்துவிடும்....
உன் கண்கள் ஒளி வீசும்...
உன்னுதரம் மொழி பேசும்...

அப்பப்பா அவ்வுணர்வு....
சொல்ல முடியாது.....
நண்பா அனுபவித்து பார்.......
நீ
அனுபவித்து பார்........






















காதல்...






2 M தூரத்தில்
2 நிமிட பார்வையில்
22 வருடம் நிர்மூலமானது...












நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக...





ஆயிரந்தாங் கதை சொன்னான்...
அழகழகாப் பொய் சொன்னான்...


ஏசுநாதர் சொன்னது போல
ஒரு கன்னத்தில் அடித்தால்
நான் மறு கன்னத்தைக் காடுவேனோ
என்பது தெரியாது...

ஆனால்
நீ என்
ஒரு கன்னத்தில் முத்தமிட்டால்
நிச்சயம்
மறு கன்னத்தைக்
காட்டுவேன்...



நீ குடை பிடித்து நடந்த போது
உன் மேல் படாத ஒளிக்கற்றைகள்
கண்ணீர் வடித்ததை என்னைத் தவிர
வேறுயார் அறிவார் ...................................



காதலின் மகிமை.............



பாடுபொருள் காதலென்றால்
பழைய 'மவுஸ்'க்கும் வருகிறது புது 'மவுசு'
தள்ளாத 'கீ போர்டு'ம் துள்ளுகிறது
எத்தனை ஆயிரம் ஆண்டுகளானலும்
இதன் வேதியியல் மட்டும்
விளங்குவதேயில்லை...........!